ஜெகத்ரட்சகன் பிரதமரை தனிமையில் சந்தித்தாரா? சமூகவலைதளங்களில் பரவும் செய்தி!

ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (18:02 IST)
திமுகவின் எம் பி யான ஜெகத்ரட்சகன் திமுக மீது அதிருப்தியில் உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் அவர்கள் கிட்டத்தட்ட பாஜகவில் இணைந்து விட்டதாகவே கருதப்படுகிறது. இன்று பாஜகவின் தலைமை அலுவலகத்துக்கு சென்ற அவர் ஸ்டாலின் குறித்து சில குற்றச்சாட்டுகளை கூறியதும் பாஜக தலைவர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவர் திமுகவின் அனைத்து விதமான பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

கு க செல்வத்தை அடுத்து திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகனும் திமுக தலைமை மேல் அதிருப்தியில் இருப்பதாகவும், அதனால் தனிமையில் பிரதமரை சந்தித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதன் மூலம் அவரும் பாஜகவுக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஜெகத்ரட்சகன் மறுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்