காசோலை மோசடி வழக்கு: சிவாஜி கனேசனின் மகன், பேரனுக்கு பிடிவாரண்ட்

செவ்வாய், 29 நவம்பர் 2022 (13:43 IST)
காசோலை மோசடி வழக்கு: சிவாஜி கனேசனின் மகன், பேரனுக்கு பிடிவாரண்ட்
காசோலை மோசடி வழக்கில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மற்றும் சிவாஜி கணேசனின் பேரன் உள்பட 3 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தனபாக்கியம் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கும் அக்சய் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மற்றும் பேரன் துஷ்யந்த் அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் நிர்வகிக்கும் ஈசன் புரோடக்சன் நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு வைத்து இருந்ததாகவும் அந்த நிறுவனம் கொடுத்த 15 லட்ச ரூபாய்க்கான காசோலைகள் போதிய பணம் இல்லாததால் திரும்பி வந்துவிட்டது என்றும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்
 
வங்கி கணக்கில் பணம் இல்லாமல் வேண்டுமென்றே காசோலை அளித்ததால் தங்கள் பணத்தை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த நிலையில் ராம்குமார் அவருடைய மகன் துஷ்யந்த் மற்றும் அபிராமி ஆகியோர் மீது பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்