தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் தளபதி விஜய் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகம் எடுத்திருக்கும் நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும், வீடியோக்களும் அடிக்கடி வெளியாகி இணையத்தில் வலம் வருகின்றது.
அந்தகையில் சமீபத்தில் கூட படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்ட சில புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வட சென்னைசுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது, எனவே, படப்பிடிப்பை காண தினமும் நுற்றுக்கணக்காக ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.