மொட்டை மாடியில் புட்ட பொம்மை டான்ஸ் ஆடி அசத்தும் VJ அஞ்சனா!

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (08:40 IST)
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வரும் அஞ்சனாவும் அவரது கணவர் சந்திரனும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர். இதற்கிடையில் அடிக்கடி மொட்டைமாடியில் போட்டோ ஷூட் வித விதமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது மொட்டை மாடியில் " புட்ட பொம்மா" பாடலுக்கு கியூட்டான டான்ஸ் ஆடிய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளி வருகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

First Reel ❤️ Buttabomma with cutest kutti bommai ❤️❤️❤️ #niece #love #bommai

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்