2 ஆண்டுகளுக்கு பின் விஸ்வாசம் பாடல் செய்த சாதனை!

வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (16:20 IST)
விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றிருந்த அடிச்சு தூக்கு என்ற பாடல் இணையத்தில் 100 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தில் இடம்பெற்ற முதல் சிங்கிள் பாடலான 'அடிச்சு தூக்கு' பாடல் வெளியாகி இணையதளங்களை கதிகலங்க  வைத்தது. ஆனால் அப்போது இந்த பாடல் பயங்கரமான ட்ரோல்களை பெற்றது. ஆனாலும் அதிக அளவில் பார்வையாளர்களைக் கவர்ந்தது. இந்நிலையில் இப்போது இந்த பாடல் இணையத்தில் 100 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது.

இதை இசையமைப்பாளர் டி இமான் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்