விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் செம! இசையமைப்பாளர் பாராட்டு

திங்கள், 6 நவம்பர் 2017 (20:43 IST)
கமல் இயக்கி நடித்து வரும் விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் சிறப்பாக வந்துள்ளதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.


 

 
விஸ்வரூபம் 2 படத்தில் ட்ரைலர் கமல் பிறந்த நாளில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை ட்ரைலர் வெளியாக உள்ளது. கமல் இயக்கி நடித்து வரும் இப்படத்தின் முதல் பாகம் 2013ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
விஸ்வரூபம் 2 படம் மீது ரசிகர்கள் மிகுத்த எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் தொழில்நுட்பம் சிக்கல் காரணமாக படம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் நாளை இப்படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது. படத்தின் ட்ரைலர் சிறப்பாக வந்துள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியுள்ளார். மேலும் படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்