தடுப்பூசி போட்டவர்களுக்கே மதுபானம் - அரசு உத்தரவு

புதன், 11 ஆகஸ்ட் 2021 (17:40 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவிய நிலையில், அமெரிக்கா, பிரேசில் நாடுகளை அடுத்த இந்தியா அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. கொரோனா முதல் அலை முடிந்து தற்போது 2 வது அலை பரவிவருகிறது.

விரைவில் 3 வது அலை பரவும் அபாயமுள்ளது என அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், கொரொனா தொற்று நாள்தோறும் அதிகளவில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் முதல்வர் பினராஜி விஜயன் லைமையிலான கேரள மாநிலத்தில், மதுகடைகளுக்குச் செல்பவர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில அரசு பிறப்பித்த உத்தரவில்,  கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர் நெகடிவ் சான்றிதழ் உள்ளவர்கள், கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்து ஒரு மாதத்திற்கு மேலானவர்கள் மட்டுமே மதுக்கடைகளுக்குச் சென்று மது வாங்கச் செல்ல வேண்டும் என கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்