பொங்கல் தினத்தில் விஷ்ணுவிஷால் படம்!

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (13:21 IST)
பொங்கல் தினத்தில் விஷ்ணுவிஷால் படம்!
விஷ்ணு விஷால் ரானா டகுபதி நடிப்பில் ‘காடன்’ என்ற திரைப்படம் உருவாகி வந்தது தெரிந்ததே. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திடீரென நிறுத்தப்பட்டது 
 
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் 
 
தமிழில் ’காடன்’ மற்றும் தெலுங்கில் ’ஆரண்யா’ என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்த படம் இந்தியிலும் அதே நாளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
பிரபு சாலமன் இயக்கத்தில் ஷந்தனு மொய்ட்ரியா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷ்ணுவிஷால், ரானா டகுபதி, ஜோயா ஹூசைன், ஷிரியா, உன்னிகிருஷ்ணன், பராஸ் அரோரா, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்