CCL போட்டி சர்ச்சை; பதில் அளித்த விஷ்ணு!!

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (20:10 IST)
இந்திய அளவில் சினிமா நட்சத்திரங்களுக்கு மத்தியில் நடைபெரும் CCL கிரிக்கெட் போட்டியில் கோலிவுட் சார்பில் விளையாடும் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விலகியதாக நேற்று அறிவித்தனர். 
 
இந்த விலகளுக்கான காரணம் போட்டியின் போது அவர்களுக்கு மரியாதை கொடுக்கப்படுவது இல்லை என கூறியிருந்தனர். இதை தவிர்த்து வேறு எந்த காரணத்தையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. 
 
இந்நிலையில் விஷ்ணு இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். இந்த முடிவை நானும், விக்ராந்தும் சேர்ந்து தான் எடுத்தோம், ஏனெனில் நாங்கள் யார் என்று நிறுபிக்க சொல்லி ஆடியன்ஸ் கேட்டால் பரவாயில்லை.
 
ஆனால், ஒரு சிலர் சொல்வதற்காக நாங்கள் எதையும் நிறுபிக்க வேண்டிய அவசியமில்லை, மூன்று நாள் பயிற்சி கொடுத்துவிட்டு விளையாடுங்கள் என்றால் எப்படி விளையாட முடியும். இதுபோல பல காரணங்களுக்காகதான் நானும், விக்ராந்தும் சேர்ந்தே இந்த முடிவை எடுத்தோம் என்று விஷ்ணு தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்