வீரம் பாதி, ஈரம் பாதி, வெல்லும் எங்கள் விஷால் நீதி: விஷால் ஆன்ந்தம் கேட்டிங்களா?

செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (00:50 IST)
நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர், தயாரிப்பாளர், என பலவித அவதாரங்கள் எடுத்துள்ள புரட்சி தளபதி விஷாலுக்கு நாளை பிறந்த நாள். அவருக்கு திரையுலகினர் இப்போது முதலே வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் விஷாலின் ரசிகர்கள் சற்று முன் 'விஷால் ஆன்ந்தம்' (Vishal Anthem) என்ற பாடலை யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளனர். விஷாலின் புகழை பறைசாற்றும் இந்த பாடலை விஷாலின் ரசிகர்கள் வெகு ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர்.
 
இதற்கு முன்னர் சிம்பு ஆன்ந்தம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது விஷால் ஆன்ந்தம் வெளியாகியுள்ளது. இன்னும் எத்தனை நடிகர்களுக்கு ஆந்தம் வெளியாகவுள்ளதோ தெரியவில்லை
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்