கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த படமும் இயக்காமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் பூஜையோடு தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங்கை விறுவிறுப்பாக நடத்தி இன்னும் சில மாதங்களில் முடித்துவிட்டு சல்மான் கான் படத்துக்கு செல்ல உள்ளார் முருகதாஸ். இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ உரிமையை ஆதித்யா ம்யூசிக் நிறுவனம் 16 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாம். இதுவரை சிவகார்த்திகேயன் படத்துக்கு இல்லாத மிகப்பெரிய தொகை இது என்று சொல்லப்படுகிறது.