விஷாலின் லத்தி திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

சனி, 27 ஆகஸ்ட் 2022 (15:49 IST)
விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படம் அடுத்த ரிலீஸாக வெளியாக உள்ளது.

விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியான நிலையில் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதையடுத்து விஷாலின் அடுத்த படமாக லத்தி என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் படத்தில் இருந்து ஒரு துணுக்குக் காட்சியைப் படக்குழு வெளியிட்டது. அதன் பின்னர் சென்னையில் படத்தின் டீசர் ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இந்த படத்தை விஷாலின் நண்பர்களான ராணா மற்றும் நந்தா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது படத்தின் தெலுங்கு தியேட்டரிக்கல் உரிமத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஜேபிஆர் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்