விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ வசூல் இத்தனை கோடியா?

புதன், 20 செப்டம்பர் 2023 (17:35 IST)
விஷால் மற்றும் எஸ்ஜே. சூர்யா நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இந்த படம் உலக அளவில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான இந்த படம் முதல் நாளே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படம் தற்போது 50 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 35 கோடி என்ற நிலையில் தற்போதே அது 15 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,. இதனால் மார்க் ஆண்டனி பட குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்