ரூ.1.50 லட்சம் ஹெல்மெட்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய TTF வாசன்

செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (17:53 IST)
பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் பைக் ஸ்டண்ட் செய்து விபத்தில் சிக்கிய நிலையில், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரத்தில் டிடிஎப் வாசன் பைக்கில் சென்று கொண்டிருந்த நிலையில் அவர் வீலிங் செய்ய முயன்ற போது விபத்துக்குள்ளாகி காயம் அடைந்தார்.

அவர் மீது ஆபத்தான முறையில் வாகனம் இயக்குதல் உள்பட 5  பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் செய்தனர்.

அப்போது டிடிஎப் வாசனை அக்டோபர் மூன்றாம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டார்.

இந்த  நிலையில்,  டிடிஎஃப் வாசன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதன்படி,  ஐஎஸ் ஐ இல்லாத வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஹெல்மெட்டை பயன்படுத்தியதாக  புகார் எழுந்துள்ளது.  இந்த ஹெல்மெட்டின் விலை ரூ.1.50 லட்சம் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்