நடிக் விஜய் போல் பிரமாண்ட விழா நடத்த விஷால் முடிவு!

Webdunia
சனி, 1 ஜூலை 2023 (21:32 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஷால். இவர் விஜய் போன்று பிரமாண்ட விழா ஒன்றை நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் நடிகர் விஜய்  தமிழகம் முழுவதும் பிளஸ் 2 , 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை பெற்றோருடன் அழைத்து, கல்வி விழா நடத்தி அவர்களுக்கு விருந்து வைத்து சான்றிதழ் மற்றும் உதவித் தொகை வழங்கினார்.

இந்த நிலையில், நடிகர் விஷால் சில ஆண்டுகளாக தேவி அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கு உதவி செய்து வருகிறார். இவர் உதவியால் 300 பேர் கல்லூரியில் படித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நடிகர் விஜய் கல்வி விழா  நடத்திய போன்று, நடிகர் விஷாலும் ஒரு கல்வி விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்