அமேசான் பிரைமில் விஸ்வாசம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (20:51 IST)
அஜித், நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, உள்பட பலர் நடித்துள்ள படம் விஸ்வாசம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெளியானது. 
 
50 நாட்களை நெருங்கியும் விஸ்வாசம் திரைப்படம் இன்னும் பல இடங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஸ்வாசம் திரைப்படம் வரும் 25 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்