அமெரிக்காவில் ஒரு நாளுக்கு முன்பே பிரீமியர் ஆகும் கார்த்தியின் விருமன்

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (09:50 IST)
கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன்  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கார்த்தியோடு அதிதி ஷங்கர், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது ஆகஸ்ட் 12 ஆம் தேதி விருமன் திரைப்படம் ரிலீஸை முன்தள்ளியுள்ளது.

இன்று படத்தின் பாடல்கள் மற்றும் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி மதுரையில் நடக்க உள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் பல நாடுகளில் ரிலீஸாகும் ‘விருமன்’ திரைப்படம் அமெரிக்காவில் ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 11 ஆம் தேதி பிரீமியர் செய்யப்படுகிறது. இதனை அமெரிக்காவில் வெளியிடும் ப்ரைம் மீடியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்