ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ.1,700 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. பாகுபலி 2 படத்தை முடித்த பிறகு பிரபாஸ் பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்தவண்ணம் உள்ளது.
இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி உலக அளவில் பெரும் வெற்றியை பெற்றதையடுத்து நடிகர் நடிகைகள் அனைவரும் புகழின் உச்சத்தில் உள்ளனர். பாகுபலி 2 வெற்றிக்கு பிறகு பிரபாஸ் உலகம் முழுவதும் அறிந்த பிரபலமாகிவிட்டார். ஒரு படத்திற்காக 5 வருடம் என எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் நடித்துக்கொடுத்தார். இந்நிலையில் இவர் அடுத்து நடிக்கும் சாஹோ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார்.