புகழ்பெற்ற குணச்சித்திர நடிகராக விளங்கிய இவர், இன்று சென்னையில் உடல் நலக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 72 ஆகும். வண்டிச்சக்கரம் என்ற படத்தில் சில்க் ஸ்மிதாவை அறிமுக செய்து வைத்தார். ரஜினியுடன் மட்டும் இவர் 11 படங்கள் நடித்துள்ளார்.
கன்னட திரையுலகில் திரைக்கதை எழுத்தாளராக சினிமா துறை நுழைந்த இவர் 1977ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். இவர் தென்னிந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டும் 900 படங்கள் நடித்துள்ளார். இறுதியாக கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த வாயை முடி பேசவும் படத்தில் நடித்தார்.