ஓவியா பேமஸ் ஆகிட்டாங்க; நான் ஹேப்பி அண்ணாச்சி - நடிகர் விமல்

Webdunia
புதன், 26 ஜூலை 2017 (12:18 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நடிகை ஓவியா பிரபலமடைந்துள்ளது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நடிகர் விமல் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
‘களவாணி’ படத்தில் நடிகர் விமலுடன் இணைந்து நடித்தார் நடிகை ஓவியா. அதுதான் அவருக்கு முதல் படம். விமலும், அவரும் அப்படம் மூலமாகத்தான் பிரபலமானார்கள். வசூல்ரீதியாகவும் அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. 
 
நடுவில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஒவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவரின் நடவடிக்கைகள், முக்கியமாக கடினமான சூழ்நிலையிலும் சிரித்த்துக்கொண்டே இருக்கும் அவரின் நடவடிக்கை அவருக்கு பல ரசிகர்களை கொண்டு வந்து சேர்த்துள்ளது.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த நடிகர் விமல் ‘எங்கு பார்த்தாலும் ஓவியா மயமாக இருக்கிறது. அவருடன் நீங்கள் நடித்தீர்களா? என என்னிடம் பலர் கேட்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் என்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. இது ஓவியாவின் நடவடிக்கைகளை பார்த்தாலே புரிகிறது. நிஜ வாழ்வில் எப்படி இருப்பாரோ, அப்படித்தான் அந்த நிகழ்ச்சியிலும் அவர் இருக்கிறார். இளைஞர் மத்தியில் ஓவியா நல்ல பெயர் எடுத்டு விட்டார். இதைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது”எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்