பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக அறியப்பட்டு வருபவர் விக்ராந்த் மாஸ்சி. அவர் மிர்சாபூர் இணையத்தொடர் மூலமாக கவனம் பெற்றார். அதன் பின்னர் அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. அப்படி அவர் நடித்த செக்டர் 36 மற்றும் 12த் பெயில் ஆகிய படங்கள் அவருக்கான அங்கீகாரத்தை பெற்றுத்தந்தன. அதிலும் 12த் பெயில் எனும் திரைப்படம் அவரை இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகர் ஆக்கியது.
ஆனால் தன்னுடைய வளர்ச்சிப் பாதையில் இப்போது இருக்கும் விக்ராந்த் இன்னும் இரண்டு படங்கள் மட்டுமே நடித்துவிட்டு அதன் பின்னர் திரைத்துறையில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். இது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் நேரம் ஒதுக்குவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.