பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்? சர்ப்ரைஸ் அப்டேட்!

Webdunia
சனி, 14 ஆகஸ்ட் 2021 (10:43 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை வெற்றிக்கு பிறகு நட்சத்திரம் நகர்கிறது படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னரே அவர் விக்ரமுக்காக ஒரு கதை சொல்லியிருந்தார். ஆனால் ரஞ்சித் கபாலி மற்றிம் காலா ஆகிய படங்களில் பிஸியானதால் அந்தப்படம் அப்போது தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் இப்போது விக்ரம் ரஞ்சித் படத்துக்கு ஓகே சொல்லவே இருவரும் தத்தமது படங்களை முடித்த பின்னர் இந்த படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்