உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் வரும் 3ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன
அந்த வகையில் இந்த படத்தின் போஸ்டர்கள் ரயில்களில் வரையப்பட்டு வரும் நிலையில் அது குறித்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ரயில்பயணம் எனக்குப் பிடிக்கும். ரயிலில் படப்பிடிப்பு சுலபமானது என்பதால் இன்னும் பிடிக்கும்.என் படங்களில் ரயில்கள் முக்கியமானவை. மூன்றாம்பிறை,மகாநதி,தேவர்மகன் என பல ரயில் காட்சிகள் உங்கள் நினைவுக்கு வரலாம்.இப்போது என் படத்தைத் தாங்கிய ரயில்கள் வலம் வருவது மகிழ்ச்சியைத் தருகிறது.