ஜூலை இறுதியில் விக்ரம்மின் தங்கலான் ரிலீஸ்… படக்குழு எடுத்த முடிவு!

vinoth

திங்கள், 27 மே 2024 (11:13 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த படத்துக்கு சில ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் இன்னும் படம் ரிலீஸாகவில்லை. ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்களவை தேர்தலால் இப்போது இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கபடாமல் உள்ளது. படம் மே அல்லது ஜூனில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போது ஜூலை இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12 அம் தேதியும், புஷ்பா 2 திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியும் ரிலீஸ் ஆகவுள்ளன. இந்த இரு படங்களுக்கும் நடுவே தங்கலான் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்