கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

vinoth

வியாழன், 16 மே 2024 (07:53 IST)
சூரரைப் போற்று திரைப்படத்தை இந்தியில் இயக்கி முடித்துள்ளார் சுதா கொங்கரா. அந்த படத்தின் ரிலீஸ் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில்  மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க இருந்தது .இந்த படத்தின் டைட்டில் ப்ரமோஷன் வீடியோ கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த படம் மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் “புறநானூறு படத்துக்கு இன்னும் நேரம் தேவைப்படுகிறது. நான் சிறந்ததைக் கொடுக்க கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த படம் எங்கள் மனதுக்கு நெருக்கமானது. விரைவில் படம் தொடங்கப்படும்” என அறிவித்தனர். இதனால் அந்த படம் ட்ராப் ஆகிவிட்டதாக கருத்துகள் எழுந்துள்ளன. படம் தொடர்பாக சூர்யாவுக்கும் சுதா கொங்கராவுக்கும் இடையில் கதை சம்மந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சுதா கொங்கரா இப்போது தனது அடுத்த பட வேலைகளில் கவனம் செலுத்துவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக இருவரும் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்