விக்ரம் பிரபுவின் தொடர் தோல்வியை தடுக்குமா வீர சிவாஜி...?

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (17:30 IST)
தொடர் வெற்றிகளை பெற்றுவந்த விக்ரம் பிரபுக்கு முதல் தோல்வியாக அமைந்தது, ஏ.எல்.விஜய் இயக்கிய, இது என்ன மாயம் திரைப்படம். கொரிய படத்தின் தழுவலான இப்படம் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் திரையரங்குகளிலிருந்து மாயமானது.


 

சமீபத்தில் வெளியான வாகா திரைப்படம் நல்ல ஓபனிங்கை பெற்றாலும் அரைகுறை கதையாலும், வலுவில்லாத திரைக்கதையாலும் தோல்வியை தழுவியுள்ளது. மினிமம் கியாரண்டி நடிகராக புகழ்பெற்ற விக்ரம் பிரபுவின் இரு படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்தது ஒரு தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் 23 அவர் நடித்துள்ள வீர சிவாஜி படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். கணேஷ் விநாயக் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஷாம்லி நாயகியாக நடித்துள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் படத்தை வெளியிடுகிறது.
அடுத்த கட்டுரையில்