விக்ரம்-தமன்னா படத்தின் தற்காலிக தலைப்பு

வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (21:02 IST)
கோலிவுட் திரையுலகில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு முதலில் ஒரு தலைப்பு வைக்க வேண்டியது, பின்னர் படம் வெளியாகும் ஒருசில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசின் வரிவிலக்கை பெறுவதற்காக தலைப்பை மாற்ற வேண்டியது என்ற டிரெண்ட் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது.





அந்த வகையில் மாஸ் முதல் பவர்பாண்டி வரை பல தலைப்புகள் வரிவிலக்கிற்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் விக்ரம், தமன்னா நடித்து வரும் படத்தின் தலைப்பு 'ஸ்கெட்ச்' என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பும் கண்டிப்பாக வரிவிலக்கிற்காக ஒருசில மாதங்கள் கழித்து மாற்றப்படும் என்றே தெரிவதால் இது தற்காலிக தலைப்பாக கருதப்படுகிறது.

வாலு பட இயக்குனர் விஜய்சந்தர் இயக்கி வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்தாணு தயாரித்து வருகிறார். தமன் இசையில் உருவாகி வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்