தமிழ் படங்களின் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸ்… முதலிடத்தில் ’விக்ரம்’… வெளியான தகவல்

திங்கள், 6 ஜூன் 2022 (10:39 IST)
விக்ரம் திரைப்படத்தின் அமெரிக்கா பாக்ஸ் ஆபீஸ் வசூல் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படம் கமல்ஹாசனின் திரைவாழ்வில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸாகிறது. இதுவரை கமல் படத்துக்குக் கிடைக்காத வரவேற்பு இந்த படத்துக்கு கிடைத்தது. முதல்நாளில் உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் முதல் வாரக் கடைசியை கடந்துள்ள நிலையில் இரண்டாவது வாரத்தின் தொடக்கத்திலும் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் வார இறுதியில் முதல் 5 படங்களுக்கு விக்ரம் திரைப்படம் இடம்பிடித்துள்ளது. இது சம்மந்தமான பட விநியோக நிறுவனமான ப்ரைம் மீடியா பிலிம்ஸ் இதுவரை விக்ரம் திரைப்படம் 15 லட்சம் அமெரிக்க டாலர்கள் வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் 12 கோடி ரூபாய்க்கு மேலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் வெளியான தமிழ்ப் படங்களின் வசூலில் விக்ரம் திரைப்படம் முதலிடத்தில் உள்ளதாக ப்ரைம் மீடியா நிறுவனம் டிவிட்டரில் அறிவித்துள்ளது.

#Vikram the highest grossing Tamil film in last 2 years

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்