முடிந்தது மஹான் டப்பிங்… விக்ரம் வெளியிட்ட புகைப்படம்!

Webdunia
சனி, 4 டிசம்பர் 2021 (10:20 IST)
மஹான் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் இப்போது டப்பிங் பணிகளும் முடிந்துள்ளன.

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு மகான் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் உறுதி செய்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். விக்ரம் ஜோடியாக சிம்ரன் நடிக்கும் இந்த படத்தில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே முடிந்த நிலையில் இப்போது டப்பிங் பணிகளையும் விக்ரம் மற்றும் துருவ் ஆகிய இருவரும் முடித்துள்ளனர். இது சம்மந்தமான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் துருவ் விக்ரம் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்