’ஜுங்கா’ படத்தின் ஷூட்டிங்கிற்காக பாரிஸ் செல்ல இருக்கிறார் விஜய் சேதுபதி.
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல், அடுத்ததாக ‘ஜுங்கா’ என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திலும் விஜய் சேதுபதி தான் ஹீரோ. ‘விக்ரம் வேதா’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் டானாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால், வெளிநாட்டில் வாழும் ஸ்டைலிஷ் டான்.
இந்தப் படத்தின் ஷூட்டிங், பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் தொடங்க இருக்கிறது. எனவே, விரைவில் பாரிஸ் பறக்கிறது படக்குழு. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.