தமிழ் திரையுலகில் வில்லனாக தனது கேரியரைத் துவங்கிய விஜயகாந்த், அதன் பின்னர் ஹீரோவானார். அதன் பின்னர் ஒரு கட்டத்தில் அவருக்கு ஹீரோவாக தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாத போது அவரை ஏவிஎம் நிறுவனம் ரஜினியின் முரட்டுக் காளை படத்தில் வில்லனாக (ஜெய் சங்கர் நடித்த பாத்திரம்) நடிக்க அழைத்துள்ளார்கள்.
விஜயகாந்தும் அந்த அழைப்பை ஏற்று நடிக்கலாம் என்ற முடிவை எடுத்த போது விஜயகாந்தின் நண்பரான இப்ராஹிம் ராவுத்தர், விஜயகாந்தை நடிக்கக் கூடாது என தடுத்துவிட்டாராம். மேலும் ஒரு படத்தில் வில்லனாக நடித்துவிட்டால் தொடர்ந்து வில்லன் வேடங்களாகவே வரும் எனக் கூறி அவரை அந்த படத்தில் நடிக்க விடாமல் தடுத்து விட்டாராம்.