வாரிசு படத்தை முக்கியப் பகுதிகளில் ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

வியாழன், 24 நவம்பர் 2022 (10:35 IST)
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிக்கும் வாரிசு படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது வாரிசு படத்தின் இறுதிகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஒரு பாடல் படமாக்கப்பட்டு வருவதாகவும், அடுத்து ஐதராபாத்தில் க்ளைமேக்ஸ் காட்சிகள் 10 நாட்கள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் படத்தைத் தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் உரிமையை மாஸ்டர் தயாரிப்பாளர் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். அவர் சென்னை, செங்கல்பட்டு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலமாகவே படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்