தமிழ் சினிமாவில் 80 களின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் ஏஸ்.ஏ.சந்திரசேகர்.
இவர், இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கடைசியாக கேப்மாரி என்ற படம் வெளியானது. இப்படத்தில், ஜெய்,அதுல்யா ரவி உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர்
இந்த நிலையில், விஜய்யுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்த எஸ்.ஏ.சி சமீபத்தில், வட மாநிலத்திற்குச் சுற்றுலா சென்றிருந்தார். இதுகுறித்த புகைப்படம் வைரலானது.
இந்த நிலையில், இன்று எஸ்.ஏ.சி இன்று தன் டுவிட்டர் பக்கத்தில், ஒரு பதிவிட்டுள்ளார், அதில், மதுரையில் இருக்கும் தன் 103 வயது சித்தியை சந்தித்தாகவும், ஆனந்தத்தோடு தன்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.