ரஷ்யா செல்ல தயாரான கோட் படக்குழு… தேர்தல் தேதி அறிவிப்புக்காக வெயிட்டிங்!

vinoth

வியாழன், 14 மார்ச் 2024 (08:20 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. அங்கு விஜய் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஒரு முக்கியமானக் காட்சியைப் படமாக்க ரஷ்யா செல்ல உள்ளது படக்குழு.

அதற்கான விசா ஏற்பாடுகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. இந்நிலையில் அடுத்த மாதத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் அதற்கேற்றார் போல ஷூட்டிங் செல்லலாம் என்ற முடிவில் காத்திருக்கிறதாம் படக்குழு. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்