CAA-வை கண்டித்து விஜய் கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள்!

Sinoj

புதன், 13 மார்ச் 2024 (15:03 IST)
மத்திய  பாஜக அரசு இந்திய குடியுரிமை திருத்த சட்டம் சிஏஏ-வை நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ள நிலையில், அவரது கட்சியை சேர்ந்த தொண்டர்கள் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் சிஏஏ அமல்படுத்தியுள்ள நிலையில், இதற்கு காங்கிரஸ், திமுக, தமிழக வெற்றிக் கழகம், புரட்சி பாரதம், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
 
இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் தலைவரும் நடிகருமான விஜய், நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
 
அதில், ''சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தும்  இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ( CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும்'' என்று தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில்,  நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ''பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்த சட்டம்( CAA)-2019   ஏற்கத்தக்கது அல்ல; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' எனக் குறிப்பிட்டு கோவை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
 
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில், சிஏஏ விவகாரத்தில்  நடிகர் விஜய்  அடிப்படை அறிவு இல்லாமல் பேசுகிறார் என்று   இந்து   மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்