பிரபாகரன் கதாப்பாத்திரத்தில் நடிக்க விஜய்சேதுபதி பொருத்தமாக இருப்பார் - ஏ.எம். ஆர்.ரமேஷ்

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (20:42 IST)
பிரபாகரன் குறித்த வெப் சீரிஸில் நடிக்க விஜய்சேதுபதி பொருத்தமாக இருப்பார் என ஏ.எம்.ஆர் ரமேஷ் கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்த நடிகர் விஜய் சேதுபதிக்கு கண்டனங்கள் குவிந்து வந்தன.

ஒரு கட்டத்தில் முத்தையா முரளிதரனே விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் தன்னுடைய படத்தால் அவருடைய திரையுலக வாழ்க்கைக்கு பிரச்சனை வேண்டாம் என்று கூறியதை அடுத்து நன்றி வணக்கம் என்று கூறி விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகினார்

இந்த நிலையில் தற்போது அதே விஜய்சேதுபதிக்கு பிரபாகரன் வாழ்க்கை வரலாறு குறித்த வெப் தொடருக்கு நடிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் இன்று வெளியானது. பிரபல இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் என்பவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை தொடராக இயக்க உள்ளார். இந்த தொடரில் பிரபாகரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் கூறினார்.

இந்நிலையில், பிரபாகரன் குறித்த வெப் சீரிஸில் பிரபாகரன் கதாப்பாத்திரத்தில் நடிக்க விஜய்சேதுபதி பொருத்தமாக இருப்பார் என ஏ.எம்.ஆர் ரமேஷ் கூறியுள்ளார்.

இவர் ஏற்கனவே சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்த திரைப்படங்களை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்