லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை மாளவிகா மோகனன்,சாந்தனு ஆகியோர் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்திற்கு ரசிகர்களிடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை குறித்து லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய அப்டேட்டை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஒரு விருது வழங்கும் விழா ஒன்றில் அறிவித்துள்ளார்.
அதில், மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு நாட்களில் முடியவுள்ளது என தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் 3 போஸ்டர்கள் வெளியாகை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாஸ்டர் பட ஷூட்டிங் ஸ்பாட்டில், நடிகர் விஜய்க்கு, நடிகர் விஜய் சேதுபதி முத்தமிடும் ஒரு புகைப்படத்தை எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் வெளியிட்டுள்ளது.