பாலிவுட் செல்லும் சுமார் மூஞ்சி குமார்!!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2017 (16:42 IST)
நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
தனது முதல் படத்தின் மூலமே 1979-ல் முன்னணி நடிகையாக வலம் வந்தார் பாக்யஸ்ரீ. இந்நிலையில், பாக்யஸ்ரீயின் மகன் அபிமன்யூ தசானி, காஷ்யப் புரொடக்‌ஷன் கம்பெனி நிறுவனம் சார்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 
 
ஆக்‌ஷன் கலந்த காமெடி பின்னணியில் உருவாக உள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுகம் ராதிகா மதன் நடிக்க உள்ளார். 
 
மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 
 
இப்படத்திற்கு `மர்த் கோ தர்த் நகின் ஹோட்டா' என்று பெயரிடப்பட்டுள்ளது. 
 
அடுத்ததாக அவர் நடித்துள்ள புரியாத புதிர் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. விக்ரம் வேதா, கருப்பன், அநீதி கதைகள், 96 உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். 
அடுத்த கட்டுரையில்