300 நாட்களில் 3 மில்லியன்: சிம்பு செய்த சாதனை!

சனி, 28 ஆகஸ்ட் 2021 (21:09 IST)
300 நாட்களில் மூன்று மில்லியன் ஃபாலோயர்களை பெற்று நடிகர் சிம்பு சாதனை செய்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது
 
நடிகர் சிம்பு கடந்த 300 நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் கணக்கைத் தொடங்கினார் அதுமுதல் அவரது பக்கத்திற்கு ஏராளமானவர்கள் தினமும் ஃபாலோயர்கள் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சிம்பு இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய 311 நாட்களில் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் அவரது பக்கத்தில் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோலிவுட் திரையுலக வரலாற்றில் இவ்வளவு குறுகிய நாளில் மூன்று மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற நடிகர் வேறு யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ள மாநாடு திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் இதனை அடுத்து அவர் ’பத்து தல என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்