மீண்டும் வெள்ளிக்கிழமை ஹீரோவாகும் விஜய் சேதுபதி… தாங்குவார்களா ரசிகர்கள்?

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (10:15 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சில படங்கள் அடுத்தடுத்து வெளியாக தயாராகி வருகின்றன.

விஜய் சேதுபதி நடித்து பல படங்கள் ரிலிஸ் ஆகாமல் இருந்த நிலையில் கொரோனா தளர்வுகளுக்கு அடுத்து திரையரங்கம் திறந்ததும் வரிசையாக அவர் படங்கள் வெளியாகின. அதே போல ஓடிடியிலும் அவர் படங்கள் நிறைய வெளியாகின. ஆனால் அதில் எந்த படங்களும் வெற்றிப் பெறவில்லை.

இதனால் இணையத்தில அவர் கேலிகளுக்கு ஆளானார். இந்நிலையில் இப்போது ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு இப்போது அவர் படங்கள் வரிசையாக மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளன. அவர் நடிப்பில் தயாராகி உள்ள மாமனிதன், காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் கடைசி விவசாயி உள்ளிட்ட சில படங்கள் டிசம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆக தயாராகி வருகிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்