சர்தார் 2 வில் கார்த்திக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?

சனி, 15 ஜூலை 2023 (12:07 IST)
கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான திரைப்படம் சர்தார்.  இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ளது.

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் இதுவரை அதற்கான எந்த முன்னெடுப்பும் செய்யப்படவில்லை.

இந்நிலையில் இப்போது சர்தார் 2 படம் பற்றிய பேச்சுகள் எழுந்துள்ளன. மேலும் இதில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்