மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் 15 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் சுமார் 5 படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள படங்களில் ஒன்று லாபம். மறைந்த இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் உருவான இந்த படம் செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே சட்டங்கள் பத்தாம் தேதி வேறு சில படங்களும் வெளியாக இருக்கும் நிலையில் லாபம் படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதிஹாசன் முதல்முறையாக நடித்திருக்கும் இந்த படம் விவசாயிகளின் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதையம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படம் முதலில் ஓடிடியில் ரிலீசாக இருந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் திறக்கப்பட்டதால் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது