''பொழப்புல மண் அள்ளிப் போடறாங்க…''.- விஜய் சேதுபதி பட தயாரிப்பாளர் டுவீட்!!

Webdunia
சனி, 3 அக்டோபர் 2020 (22:29 IST)
தமிழ் சினிமாவில் நடித்து வரும் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் க/பெ ரணசிங்கம்.  இப்படத்தை விருமாண்டி என்பவர் இயக்கியுள்ளார்.

இப்படம் வேறெந்தப் படமும்  இல்லாத விதத்தில் இந்தி, தெலுங்கு கன்னடம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது.

இந்நிலையில் டுவிட்டர் பக்கத்தில் ஒருவர் இப்படத்தைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டுமென்று கூறி அதில் டெலிகிராம் பக்கத்தில் உள்ள லிங்கை ஷேர் செய்திருந்தார்.
இதுகுறித்து க/பெ ரணசிங்கம் பட தயாரிப்பாளர்,

பல பேரோட உழைப்பு, இரத்தம்னு எல்லாத்தயும் சிந்தி படம் பண்ணா இந்த மாதிரி ஆளுங்க வந்து மண் அள்ளிப் போடுவாங்க, அத support பண்ண நாலு பேரு வருவாங்க! அப்றம் தமிழ்ல நல்ல படம் வர்ல்ட் பொலம்புவாங்க எனத் தெரிவித்துள்ளார். #GodSaveTamilCinema

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்