புலிக்கு ரூ.5 லட்சம் கொடுத்த விஜய்சேதுபதி !

Webdunia
ஞாயிறு, 3 மார்ச் 2019 (20:42 IST)
நடிகர் விஜய்சேதுபதி ஒரு நல்ல நடிகர் மட்டுமின்றி சமூக அக்கறை உள்ளவர், பிறருக்கு உதவும் மனம் கொண்டவர், ரசிகர்களை மதிக்க தெரிந்தவர் மற்றும் தன்னால் முயன்ற பண உதவியை பிறருக்கு செய்து வருபவர் என்பது அவருக்கு நெருக்கமானவர்கள் மட்டுமின்றி பலருக்கும் தெரிந்த உண்மை
 
இந்த நிலையில் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் உள்ள அரியவகை புலி இனமான வெள்ளைப்புலிக்கு நடிகர் விஜய்சேதுபதி ரூ.5 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவருடைய இந்த நிதியுதவிக்காக அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
 
இந்த் நிலையில் 'மாமனிதன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ள விஜய்சேதுபதி தற்போது 'சிந்துபாத்' மற்றும் விஜய்சந்தர் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்