விஜய் சேதுபதி பட நடிகையின் புது பட அறிவிப்பு!

புதன், 9 மார்ச் 2022 (22:58 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது புதுப்பட குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் காக்காமுட்டை என்ற படத்தில்  அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அதன் பின்னர் வடசென்னை,  நம்ம வீட்டுப் பிள்ளை,  தர்மதுரை, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல படங்களில்  நடித்து முன்னணி நடிகையானார்.

இவரது நடிப்பில் துருவ நட்சத்திரம், தி கிரேட் இந்தியன் கிச்சன் உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், லாக்கப் என்ற படத்தை இயக்கிய எஸ்.ஜி.சார்லஸ் இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். இவருடன் இணைந்து கருணாகரன், சுனில் ரெட்டி, கிங்ஸ்லி உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும்  ஹம்சினி என்டெர்டெய்யின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து  புரோடெக்சன் நம்பர் 1 என்ற பெயரில் தயாரிக்கவுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்