ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் விஜய் சேதுபதியின் இரண்டு படங்கள்!

வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (17:19 IST)
நடிகர் விஜய் சேதுபதியின் இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலிஸ் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

நடிகர் விஜய் சேதுபதியின் கைவசம் 10க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. அதுபோலவே அவர் நடித்து முடித்து ரிலிஸுக்காக காத்திருக்கும் படங்களும் எண்ணிக்கையில் அடங்காமல் உள்ளன. இந்நிலையில் இப்போது அவரின் இரண்டு படங்கள் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏப்ரல் 28 ஆம் தேதி அவர் கதாநாயகனாக நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதே நாளில் அவர் வில்லனாக நடித்துள்ள கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்