விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் இயக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது. விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் உருவான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்து அவர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படம் ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாக இயக்குனர் நித்திலன் கூறியுள்ளார். படத்தின் கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நட்டி நட்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படத்தில் வில்லனாக நடிக்க, அனுராக் காஷ்யப் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான அனுராக் காஷ்யப் ஏற்கனவே தமிழில் இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.