அந்த வகையில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான ’மகாராஜா’ வர்த்தக ரீதியாக எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது. கவனம் ஈர்க்கும் காட்சிகளுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கு இந்தப் படம் ஜூன் 14, 2024 அன்று வெளியாகிறது. விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் என்பதால், இந்த சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவின் ‘மகாராஜா’ திரைப்படம் இடம்பெறும் நிகழ்வை பேஷன் ஸ்டுடியோஸ் நடத்தியது.
விஜய் சேதுபதி தனது ஆரம்ப நாட்களை துபாயில் கழித்ததால், இந்த நாட்டு மக்களிடமிருந்து விருந்தோம்பல் மற்றும் பாசத்தைப் பெற ஒருபோதும் தவறவில்லை. நேற்று மாலை (ஜூன் 6), புர்ஜ் கலிஃபாவில் பிரமிக்க வைக்கும் ’மகாராஜா’ படம் இடம்பெற்றிருந்ததை அங்கிருந்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.