விஜய்சேதுபதியின் 50வது திரைப்படம் ‘மகாராஜா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Mahendran

புதன், 5 ஜூன் 2024 (12:48 IST)
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படம் மகாராஜா என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ்-க்கு தயாராக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் சற்றுமுன் மகாராஜா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பை பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இந்த படம் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்னும் ஒன்பது நாட்கள் மட்டுமே ரிலீஸ் தேதி இருப்பதை அடுத்து விரைவில் படத்தின் குழுவினர் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதி,  அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ்  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
அஜனீஷ் இசையில் உருவான இந்த படம் தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்