அரசியல்வாதியாகிறார் விஜய்?

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2017 (16:13 IST)
‘மெர்சல்’ படத்தில், அரசியல்வாதியாக விஜய் நடித்திருக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது.


 

 
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘மெர்சல்’. அப்பா – இரு மகன்கள் என மூன்று வேடங்களில் விஜய் நடிக்கும் இந்தப் படத்தில், அப்பா விஜய் பண்ணையாராகவும், ஒரு மகன் டாக்டராகவும், இன்னொரு மகன் மேஜிக் நிபுணராகவும் நடிப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், அவர் அரசியல்வாதியாக நடித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியான ‘மெர்சல்’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தில், அட்லீக்குப் பின்னால் உள்ள போஸ்டரில், மைக் முன்பு விஜய் பேசுவது போல உள்ளது. அத்துடன், அவருக்கு அருகில் இரண்டு கொடிகளும் பறக்கின்றன. அதில் ஒன்று, இந்திய தேசியக்கொடி. இன்னொன்று, கட்சிக்கொடி போல உள்ளது. போஸ்டரில் மொட்டை ராஜேந்திரனும் இடம்பெற்றிருப்பதால், அரசியல்வாதியாகவும் விஜய் நடித்திருக்கலாம் என்கிறார்கள்.
அடுத்த கட்டுரையில்